சூர்யா ஆசன கலையை கற்றுத் தேர்ந்து வகுப்பெடுத்து பலருக்கு வழிகாட்டி வருகிறார். ஆசனங்களில் அவர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆசனங்கள் என்ற நூல் உருவாகியுள்ளது. இந்நூல் அனைவருக்கும் பயன்பெறும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாகும். இந்நூலை படித்து பயன் பெறுவதுடன் சூர்யாவிடம் ஆலோசனையும் பெற்று பயன்பெறுங்கள்.
நம் ஆரோக்கிய வாழ்விற்கு ஆசனம் ஒன்றே தீர்வு ஆசனத்திற்கு நம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டால் நன்மைகள் கோடி.
ஒவ்வொரு ஆசனத்தையும் எப்படி? எதற்கு? ஏன்? எவ்வாறு செய்ய வேண்டும் என அழகாக எடுத்துரைக்கிறது. மனதிற்கு உற்சாகத்தையும் ஆரோக்கியமான வாழ்விற்கு நம்பிக்கையும் ஊட்டுகிறது.
நூலின் பெயர்: ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆசனங்கள் ஆசிரியர்: சூர்யா
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்10/3, வெங்கடேஷ் நகர் பிரதான விருகம்பாக்கம், சென்னை -600 செல்பேசி:- 8939387276/96.